9 May 2017

இது அரசியல் அல்ல


பரம சுகம்
            ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஐங்கரனுக்கு இதரச் செலவினங்களுக்கான ஆபீஸ் காசு ஐநூறை அமுக்கிக் கொள்வதில் பரம சுகம்.
*****
இது அரசியல் அல்ல
            "தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்!" என்ற தாத்தாவிடம், "போங்க தாத்தா! தப்பு செஞ்சா வழக்குதான் போடுவாங்க! தண்டனையெல்லாம் தர மாட்டாங்க!" என்றாள் அம்முக்குட்டி.
*****
காரணம்
            "இடைத்தேர்தல்லாம் ரொம்ப காஸ்ட்லி!" போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் சொன்னார் தலைவர் தங்கமணி.
*****

1 comment: