ஒன், டூ, த்ரி,... காதல்!
முதல் காதல்
பரவசம்!
இரண்டாம் காதல்
ஆறுதல்!
மூன்றாம் காதலும்
அதற்குப் பின் வந்த காதல்களும்
பொழுதுபோக்கு.
உன் பசியை நான்
தீர்த்திருக்கக் கூடாது
நீ இப்போதெல்லாம்
பீட்சா ஹட் வருவதேயில்லை.
சந்தேகமே இல்லை
நீ இரத்தக் காட்டேரிதான்
டாப் அப் பண்ணி
மீள்வதற்கில்லை.
நான்
வீசியெறிந்த ஆணுறையைக்
கொத்திச் சென்ற
காக்கையைத் தேடிக் கொண்டு
இருக்க
அது மரமொன்றின் உச்சியில்
அமர்ந்து
சாட்சிபாவமாய்ப் பார்த்துக்
கொண்டிருக்கிறது
என்னை.
*****
கடைசிப் பத்தி.... ஆஹா...
ReplyDelete