7 May 2017

கடவுளின் கடவுச் சொல்


கடவுளின் கடவுச் சொல்
பேஸ்புக் பாஸ்வேர்டைச் சொல்லி
பார்க்கச் சொல்லும்
வெள்ளந்தி அம்மாவிடம்
ஒரு நாளும் சொன்னதில்லை
என் பேஸ்புக் பாஸ்வேர்டை.
*****

வேட்பது யாதெனின்...
நடுரோட்டில் வெட்டும்
உன் வெளிப்படையை நீயே வைத்துக் கொள்.
தாழிட்ட வீட்டில்
மனையாளை அடிக்கும்
உன் ரகசியத்தை நீயே வைத்துக் கொள்.
எனக்கு வேண்டியதெல்லாம்
உன் இரக்கமற்ற மனதைத்
தப்பிக்க விடாத சட்டங்களும்
உன்னைக் கேள்விக் கேட்பதைத் தடுக்காத
மேலாதிக்க புனிதத்துவ பார்வைகளும்தான்.
*****

இறந்தார் வாய் இன்னாச் சொல்
‍தெரு முக்கு
பேருந்து நிறுத்தம்
பெருங்கூட்டப் பேருந்து
அலுவலகம்
கேண்டின் என்று
வீட்டில் சென்று அடையும் வரை
கேட்டாக வேண்டும்
கட்டுப்பெட்டி பெண்குட்டி என்று
இவர்கள் சொல்வது அனைத்தையும்
தலைகுனிந்து புன்னகை அரும்பும் முகத்தோடு.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...