7 May 2017

பார்ட்டிக்கு நோ!


ஏன் இப்படி?
            "திறந்து கிடக்குற ஏ.டி.எம்.மை விட்டு விட்டு ஏம்ப்பா பூட்டிக் கிடக்குற வீட்டுல போய் திருடனும்?" என்றான் பீரோ புல்லிங் திருடனின் மகன்.
*****
மாற்றுப் பார்வை
            முதியோர் இல்லத்துக்குச் சென்று அப்பா, அம்மாவைப் பார்க்கும் முடிவை மாற்றிக் கொண்டு, நகைக் கடைக்கு வரும் நடிகையைப் பார்க்கப் புறப்பட்டார் அம்மையப்பன்.
*****
பார்ட்டிக்கு நோ!
            வருமான வரிச் சோதனைகள் பற்றி வந்த செய்திகளைக் கேள்விப்பட்ட தன்ராஜ் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார்.
*****

No comments:

Post a Comment