8 May 2017

செம்மாந்த வரிகள்


செம்மாந்த வரிகள்
"யாரும் ஊரே யாவரும் கேளிர்" என்றான்
"உண்டாலம்ம இவ்வுகலம்" என்றான்
"விருந்து புறத்ததாத் தானுண்டல்" என்றான்
"தாயினும் சாலப் பரிந்து" என்றான்
"எந்நாட்டவர்க்கும் ‍இறைவா" என்றான்
எல்லாம் நம்பி
இங்கே அகதியாய் வந்த ஈழத் தமிழன்
மாண்டு போனான்.
*****

வாசகங்கள்
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை
சங்கிலி பறித்த திருடனின்
டீ சர்ட்டில் எழுதியிருந்தது,
"அச்சம் தவிர்!"
*****

No comments:

Post a Comment