அவருக்கென்ன?
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது
என்று அறிவித்த அமைச்சருக்குச் சொந்தமாக ஆறு தொழிற்சாலைகள் இருந்தன.
*****
ஏன் டாடி?
"கண்ணாடித் தொட்டியில இருக்குற மீன்களைப்
பிடிக்க, ஏன் டாடி போட் எடுத்துகிட்டு கடலுக்குப் போறாங்க?" என்றான் இன்டர்நேஷனல்
பள்ளியில் படிக்கும் ஆதிக்.
*****
பார்வைகள்
பசி மயக்கத்தில் விழுந்த கடந்த சந்திரசேகரை
அனுதாபமின்றிப் பார்த்துச் சென்றனர். அருகில் இருந்தது டாஸ்மாக் கடை.
*****
No comments:
Post a Comment