நீ நான் மற்றும் அவர்கள்
நீயும் நானும் காதலிக்க
விட மாட்டார்கள்.
நீயும் நானும் மணம் செய்து
கொள்ள
நிச்சயம் மாட்டவே மாட்டார்கள்.
நம்மைப் பிரித்து வைக்கும்
சாதியை
அவர்கள் சேர்த்து வைப்பார்கள்.
அவர்களின் சாதிக்காக
இந்த ஜென்மத்தில் நாம்
பிரிந்தால்
ஏழேழ் ஜென்மத்திலும்
சாதிக்காக
மனிதர்கள் பிரிந்தே இருப்பார்கள்.
மதம் மாறிக் கொள்வது
போல
சாதி மாறிக் கொள்ள சம்மதிக்க
மாட்டாத இவர்கள்
சாதித் தீயில் வெறி எனும்
சிகரெட் பற்ற வைத்துக் கொள்வார்கள்
தங்கள் அன்பெனும் இதயம்
நாளுக்கு நாள்
கருத்துப் போய்க் கொண்டு
இருப்பது புரியாமல்.
*****
சாட்சி
நேரில் பார்த்த சாட்சி
இல்லை என்றார்கள்
சிரித்துக் கொண்டது
கண்காணிப்புக் கேமிரா.
*****
தரிசனம்
கருவறை தரிசனம்
முடித்துத் திரும்புவதற்குள்
மீண்டும் ஒரு முறை
எண்ணிப் பார்த்து விட்டேன்
எட்டு கண்காணிப்புக்
கேமிராக்கள்.
*****
No comments:
Post a Comment