9 May 2017

ஒரு சிங்கமும் 4 எருதுகளும்


ஆட்கள் அள்ள...
            மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதும், கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வர மட்டும் லாரிகளைப் பயன்படுத்துவதென தீர்மானித்தார் உரிமையாளர் லிங்கப்பா.
*****
அழைப்பு
            தாய்க் கட்சியில் இணைய வந்த அழைப்பை மறுத்த தனிக்கட்சித் தொடங்கிய அரங்கநாயகம் தாய்க் கட்சிக்கு தன் கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார்.
*****
ஒரு சிங்கமும் 4 எருதுகளும்
            ஒரு சிங்கமும் நான்கு எருதுகளும் கதையைச் சொன்ன பாட்டிக்கு, "சரிதான் பாட்டி! ஒரு கட்சி ரெண்டா பிரிஞ்சா கட்சி சின்னம் கூட கிடைக்காது!" என்று நீதியைச் சொன்னான் பேரன்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...