6 May 2017

மதிப்பு


மதிப்பு
அறுபது பவுன் நகை
ஆறு கிலோ வெள்ளி
அறுபத்து மூன்று கிலோ வெண்கலம்
ஆறு லட்சம் ரூபாய் கல்யாணச் செலவுக்கு
அனைத்து வகை எவர்சில்வர் பாத்திரங்கள்
டி.வி., வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி,
கட்டில், மெத்தை, பீரோ, டைனிங் டேபிள் சீர் வரிசை
தட்டுமுட்டுச் சாமான்கள்
சகிதம் நாட்டுப் பெண்ணாய் வந்திறங்கி
இந்து வீட்டுக் குடித்தன அடிமையாய் வாக்கப்பட்டு
இருப்போர்க்கெல்லாம் வடித்துக் கொட்டி
பத்துப் பாத்திரம் தேய்த்து
புழக்கடையில் புழங்கி
படி தாண்டா பத்தினாய்ப் பழக்கப்பட்டு
கணவன் கால் தொழுதவளுக்கு
இப்போதுதான் வாய்ப்பு வந்திருக்கிறது
ஊருக்கு ஊராட்சி மன்றத் தலைவராய்
ஒரு ரப்பர் ஸ்டாம்பாகவேனும்
இந்த முறை பொம்பளை பிரசிடென்ட் என்பதால்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...