அறியாத ஒன்று
வான் தொட்டு உயர்ந்து
நிற்கும் கட்டிடத்தின்
பதினான்காவது மாடியில்
செயற்கை நறுமணம் கமகமக்க
தொட்டியில் இருந்த
குறுமரங்களும், குறுஞ்செடிகளும்
மலைக்காட்டை மனதில் இருத்த
பனி படர்ந்த நள்ளிரவில்
நீயும் நானும் சந்தித்தோம்.
நீ உன் கேபினுக்குப்
போக
நான் என் கேபினுக்குப்
போக
இருவரும் நம் பீ.பீ.ஓ.
வேலையில்
ஆழ்ந்துப் போனது
குறிஞ்சிக் கபிலன் அறியாத
ஒன்று.
*****
ஆத்ம திருப்தி
குடிபோதையில் காரோட்டி
பத்துப் பேரைக் கொன்றவனை
பத்து வருடங்களாய்
வழக்கு நடத்திக் கொண்டு
இருக்கிறது
நீதிமன்றம்
பத்து செகண்டில் முடிந்து
விட்ட
ஆத்மாக்களின் நினைவை
பத்து ஆண்டுகளாய் நினைக்க
வைத்த
மனசாந்தியோடு.
*****
No comments:
Post a Comment