தைத்தல்
"செருப்பால அடி
நாயே!"
உக்கிரமாகக் கேட்ட
பெரிய வீட்டுக்காரரின்
வார்த்தைகள்
இதயத்தில் தைத்திருக்கக்
கூடும்
பக்கத்தே செருப்பு தைத்துக்
கொண்டிருந்த
சக்கிலி சாமியப்பனை.
*****
வருத்தங்கள்
பதினான்கு வருடமாய்
போஸ்டர் ஒட்டி
ப்ளக்ஸ் வைத்து
ஆட்கள் திரட்டி
கட்சிக்காக உழைத்து
பின்வந்தவர்கள் எல்லாம்
முந்திச் சென்று வட்டச்
செயலாளர்களாய்
மாவட்ட செயலாளர்களாய்
ஆன பின்னும்
இன்னும் தொண்டனாகவே
திருப்தியோடு
இருக்கும் கந்தசாமிக்கு
வருத்தம்தான்
ஒரு தேர்தலில் நின்று
தோற்றுப் போன
தலைவர் கூட்டணி மாறியதில்.
*****
அருமை
ReplyDelete