11 May 2017

காட்டிக் கொடுத்த முனி


காட்டிக் கொடுத்த முனி
            உருமுனி நேரத்தில் வெளியே செல்பவர்களை முனி அடித்து விடுவார் என்பார் மாமா. ஒரு காலம் வரை மாமாவைக் காப்பாற்றிய முனி கடைசியில் பொறுக்க முடியாமல் ஒரு நாள் காட்டிக் கொடுத்து விட்டுப் போனார் அவரின் கள்ளத்தொடர்பை.
*****
அறிவு உரை
            நல்ல அறிவுரைகள் சொல்லும் போலீஸ் மாமா காரியம் ஆக வேண்டும் என்றால் காசு கேட்பார்.
*****
வெளியீடு
            மைக் பிடித்த சிறப்பு விருந்தினர்கள் தங்கள் சொந்தக் கதை, சோகக் கதைகளைப் பேச, முடிந்து போனது எழுத்தாளனின் நூல் வெளியீட்டு விழா.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...