12 May 2017

பேசத் தெரியாது


பேசத் தெரியாது
            "எனக்குப் பேசத் தெரியாது!" என்று மைக் பிடித்தவர் ஒன்றரை மணி நேரமாகப் பேசிப் பேசித் தெறிக்க விட்டார்.
*****
பகிரங்கம்
            சிறு சுடு சொல் பொறுக்காது திரையில் வில்லன்களைப் பந்தாடிய ஹீரோ, திரைப்படம் வெளியாக எதிர்ப்புத் தெரிவித்த அமைப்பினரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
*****
பகிர்வு
            டி.வி.யை ஆன் செய்து விட்டு வெங்காயம் உரிக்க உட்கார்ந்தாள் அம்மா.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...