வருவான் அம்ம தலைவ!
குதிரை போல் விரையும்
யமஹா ஒய்.பி.ஆரில்
ஏறி அமரும் சிங்கம் போன்ற
தலைவன்
சட்டைப்பையில் இருக்கும்
கார்டை மட்டும் உறுதிபடுத்திக்
கொள்வான்.
நெடுஞ்சாலையில் மிருகங்களின்
வேகத்தோடு விரையும்
வாகனங்களின் ஊடே பயணித்து
இயந்திரத்தில் அடைத்து
வைத்தப் பணத்தை
அண்டாகா கசம் அபுகா கசம்
என்று
கார்டைத் தேய்த்து ரகசிய
எண் அழுத்தி
கத்தைக் கத்தையாய்ப்
பணம் பெறுவான்.
கே.எப்.சி.யோ, பீட்சா
கட்டோ போய்
வறுத்து வைத்த முழுக்கோழியையோ
கறிமசாலையோ பாலிதீன்
பை நிரம்ப வேட்டையாடி
பசித்திருக்கும் பெண்புலி
போன்ற தலைவிக்குத் தர
சிக்னலை மதிக்காமல்
சைக்கிள் கேப் சந்து
பொந்து பாராது
வேகத்தடைகள் பல கொண்ட
பள்ளம் மேடுள்ள சாலையில்
விரைந்து வருவானே
ஹெல்மெட் அணியாத் தலையோடு
ஆர்.சி.புக், இன்ஷ்யூரன்ஸ்
எதுவும் இல்லாமல்
வெற்றி கொண்ட வேங்கை
போல் செல்பேசிக் கொண்டு.
*****
உடன்போக்கு
விபத்தில் அடிபட்டுக்
கிடக்கும்
இரத்தக் கவிச்சி நுகர்ந்தாலே
மயக்கமாகி விடும் மகள்
நள்ளிரவில் கொலையும்
கொள்ளையும் நடக்கும்
ஊரில் வீட்டை விட்டு
எப்படிச் சென்றாளோ
குறுந்தாடியும், மதுக்கவிச்சி
அடிக்கும்
லுங்கி அணிந்த பேட்டை
ரெளடி ஒருவனுக்குத்
தலைவியாக?!
*****
No comments:
Post a Comment