12 May 2017

ஒரு குடும்பத் தலைவன் படம் பார்த்தான்!


தப்பாட்டம்
குடித்துக் குடித்தே
செத்துப் போன
சித்தப்பாவின் இழவிலும்
ரிகார்ட் டான்ஸ் அழகிகளுக்கும்
ஊத்தி விட்டுக் கொண்டே
குடித்துக் கொண்டே ஆடுகிறார்கள்
சித்தப்பாவின் சக தோழர்கள்.
*****

ஒரு குடும்பத் தலைவன் படம் பார்த்தான்!
ஒரு புத்தகம் வாங்குவதற்கு
ஆயிரத்தெட்டு கணக்குப் பார்த்தவன்தான்
மாத பட்ஜெட்டில் அரை லிட்டர்
எண்ணெய் கூடுதலாகப் போனால்
முணுமுணுப்பவன்தான்
போன மாதம் நாற்பது ரூபாய் கூடுதலாக வந்த
மின் கட்டணத்திற்காக நான்கு நாள்களாக
புலம்பித் தள்ளியவன்தான்
மாதக் கடைசியில் பத்து ரூபாய்க்கு
பூ கேட்டாலும் எரிந்து விழுபவன்தான்
எப்படி மனது வந்து
நூறு ரூபாய்க்குப் பொறாத
தலைவர் பட டிக்கெட்டை
ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு வாங்கி
தான் மட்டும் பார்த்து வந்தானோ?
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...