8 May 2017

நண்பா எங்கிருக்கிறாய்?


சுமூகத் தீர்ப்பு
            சுந்தரராஜனுக்கும் அவரது மகனுக்கான சண்டையைச் சுமூகமாக்க ஐடியா கொடுத்தார் ரவிச்சந்திரன், "அவனோட பேஸ்புக் ஐ.டி.க்கு ஒரு பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!"
*****
நண்பா எங்கிருக்கிறாய்?
            "மூணு மாசத்துக்கு முன்னாடி வாட்ஸ் அப்ல அசோக்கோட ஸ்டேட்டஸ் பார்த்தது. எங்கடா இருக்கான் அவன்?" நண்பனைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தான் கார்த்திக்.
*****
விடியல்
            "எல்லா கட்சிகிட்டேயும் காசு வாங்கியாச்சு. எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடறதுன்னு குழப்பமா இருக்கு!" ரங்கசாமியின் குழப்பத்தைத் தீர்ப்பது போல ரத்தானது இடைத்தேர்தல்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...