நகரிகம்
நொறுங்கிக் கிடக்கும்
மதுப்பாட்டில்கள்
உடைந்துப் போன தண்ணீர்க்
குழாய்கள்
அங்கங்கே கிடக்கும் ஆணுறைகள்
பெண்ணுறுப்பைச் சிதைக்கும்
வாசகங்கள்
புகைத்துப் போட்ட சிகரெட்
துண்டுகள்
பல்லிளித்துக் கொண்டு
பளபளப்பாகக் கிடக்கும்
கால் குட்கா பாக்கெட்டுகள்
ஒரு பொது இடத்தின் ஒதுக்குப்புறங்கள்
போதும்
யாது நம் ஊர், யாவர்
நம் கேளிர் என
நமது நாகரிக நகரிக செழுமையைப்
பறைசாற்ற.
*****
ஆக கடினம்
நோய் முற்றி
நெடுநாள் படுக்கையில்
கிடந்து
புறக்கணிப்பின் நெடி
நுகர்ந்து
உயிர் நீக்கும்
சில நோடிகளுக்கு முன்னர்
தாத்தா சொன்னார்,
"வாழ்வது எனிது
சாவது கடினம்!"
*****
தாத்தா சொன்னது நிஜம்
ReplyDelete