அழிந்துப் போன குறுஞ்செய்தியாளன்
காலையில் குட்மார்னிங்
சொல்வதற்கு
மதியம் ஹாவ் யுவர் லஞ்ச்
என்று விசாரிப்பதற்கு
மாலையில் குட் ஈவ்னிங்
சொல்வதற்கு
இரவில் குட் நைட், ஸ்வீட்
ட்ரிம்ஸ் சொல்வதற்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்
சொல்வதற்கு
முக்கிய தினங்கள் வந்தால்
அந்நாளைய வாழ்த்துகள்
சொல்வதற்கு
தினம் நூறு அல்லது நூற்றம்பைது
குறுஞ்செய்திகள் அனுப்ப
வேண்டும்
ஐம்பது குறுஞ்செய்திகளாவது
அனுப்பியவர்களிடமிருந்து
வர வேண்டும் அவனுக்கு.
அதன் பின் பேஸ்புக்,
வாட்ஸ் அப் என்று
யானையும் துதிக்கையும்
போல
செல்லும் கையுமாய்
அப்லோடித் தள்ளியவன்
இப்போது
மாதம் தொடங்கினால் வரும்
வட்டிக் கட்டச் சொல்லி
வங்கியிலிருந்து வரும்
ஒற்றைக் குறுஞ்செய்தியை
ஒரு முறைக்கு நான்கு
முறை பார்ப்பதோடு
நிறுத்திக் கொள்கிறான்
செல்லுக்கும் தனக்குமான
தொடர்பை.
*****
No comments:
Post a Comment