8 May 2017

வன்குடும்பப் பெண்ணின் சமத்துகள்


வன்குடும்பப் பெண்ணின் சமத்துகள்
இந்த இரவில் அடித்த வெயில்
உன் பதிலைப் போல
எல்லாவற்றையும் தலைகீழாகத்
திருப்பிப் போட்டு விட்டது.
மேகமற்ற மழையைப் போல
உன் செய்கைகள்
புதிர்களைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
வண்ணமற்ற வானவில்லைப் போல
வாழ்வை அமைத்துக் கொண்டு
சந்தோச நிறங்களால் சிலிர்ப்பதைப் போல
நீ செய்யும் குருட்டுத்தனத்தை
புத்திசாலித்தனம் என்று
சொல்ல வைத்துப் போகிறாய்.
உள்ளுக்குள் நாங்கள்
குமைந்து கொண்டிருப்பதை
உன் சமாளிப்புகளால்
தணித்து விடலாம் என்று நினைக்கிறாய்
சூடான தோசைக்கல்லில் தெளித்த நீர்த்துளிகள் போல்
அது ஆவியாவது புரியாமல்.
*****

யாக்கை வென்றான்
பத்து குறுஞ்செய்திகள்
நான்கு அழைப்புகள்
ஏழு பேஸ்புக் பதிவுகள்
பதினான்கு வாட்ஸ்அப் செய்திகள்
ஒரு சவ ஊர்வலம் தொடங்கி முடியும் வரை
பார்த்து முடித்து விடுகிறோம்.
தகனத்திற்கு முன் எடுத்து விடும்
ஒரு செல்பியில்
கலந்து கொண்டதற்கான
அத்தாட்சியோடு
முழு புளங்காகிதம் அடைந்து
புறப்படுகிறோம்
இறப்பை வென்று விட்ட ஒரு சவமாக.
*****

1 comment:

  1. "சூடான தோசைக்கல்லில் தெளித்த நீர்த்துளிகளைப் போல" அற்புத உவமை

    ReplyDelete

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...