5 May 2017

பிழைப்பும், பொழைப்பும்


கெஞ்சல்
            "ஆறு வருஷம் தேர்தல்ல நிற்கக் கூடாதுங்றதை ஏத்துக்கிறேன். வாக்களார்களுக்குப் பட்டுவாடா பண்ண ஐம்பது கோடி பணத்தை மட்டும் வசூல் பண்ணி கொடுத்திடுங்க!" தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சினார் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேட்பாளர்.
*****
தேர்வு
            தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, "அவ்வளவு பணமெல்லாம் செலவு செய்ய முடியாது தலைவரே!" என்று நாமினேஷனிலிருந்து ஒதுங்கிய வேட்பாளராகப் பார்த்து தேர்வு செய்தார் தலைவர் கருணாகரன்.
*****
பிழைப்பும், பொழைப்பும்
            பைக்கில் சென்ற பரமதயாளன் தனியார் பள்ளியில் மகனை இறக்கி விட்டு விட்டு, அரசுப் பள்ளியை நோக்கி விரைந்தார் ஆசிரியர் பணியெனும் அறப்பணியாற்ற.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...