5 May 2017

தலைமறைவு


காத்திருப்பு
தலைவன் போர் முடிந்து
வெற்றி வாகைச் சூடி வரும் வரை
கூதிரில் நடுங்கியபடி வாடையைச் சுமந்தபடி
தவித்திருக்கும் தலைவி,
கணவனின் அசைன்மெண்ட் முடிந்து
பிரமோஷனோடு வரும் காலம் வரை
ஏ.சி.யில் நடுங்கியபடி
ம்ஹூம், ஊஹூம் திரைப்பாடல்களை
ஏக்கப் பெருமூச்சு விட்டபடி
அபார்ட்மெண்டில் காத்திருக்கும் மனைவியாகி,
இன்று கெட் டுகதர் அக்ரிமென்டிற்காக
நடுமத்தி நகர வாடகை குடியிருப்பு ஒன்றில்
காத்திருப்பாள்
ஆணுறை வாங்கச் சென்றிருக்கும்
ஆண்தோழன் திரும்பி வருவதற்காக.
*****

தலைமறைவு
புரட்சி வெடிக்கும்
புதிய ஜனநாயகம் மலரும்
மக்கள் அதிகாரம் சர்வாதிகாரம் ஆகும்
கல்வியும் சுகாதாரமும் இலவசம் ஆகும்
லஞ்சம் என்றால் குடலறுப்போம்
ஊழல் என்றால் பொது மன்றிலில் தூக்கிலிடுவோம்
ஆவேச உரை முழங்கியவன்தான்
கருவில் அவன் உயிரைச் சுமக்கிறேன் என்று
தெரிந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவானான்.
*****

No comments:

Post a Comment