17 Mar 2017

செவத்தக் காளை போறான் கேரளாவுக்கு


காளையனை கறிக்கு அனுப்பு
            ஏர் உழ டிராக்டர் வந்த பிறகு, பிறந்த காளைக் கன்றுகளையெல்லாம் மாட்டிறைச்சிக்கு விற்றார் அப்பண்ணசாமி.
*****
பாக்கெட்டுக்குள் சுருண்ட கொட்டில்
            கொட்டில் சிதிலமடைந்த வீட்டுக் கதவு முன் தொங்கியது, பிய்ந்த ஒயர் கூடை பாக்கெட் பாலுக்காக.
*****
செவத்தக் காளை போறான் கேரளாவுக்கு
            "அதான் மாட்டாஸ்பத்திரிக்குக் கொண்டு போனா சினை பிடிக்க ஊசி போடுறானுங்களே! அப்புறம் என்ன?" என்று ஆசையோடு வளர்த்த எருதுகளைப் பிடித்துக் கொடுத்தார் மன்னாரு கேரளாவுக்குச் செல்லும் லாரிகளுக்கு.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...