17 Mar 2017

பூ


அழுக்கு
மீன் விற்கும்
என் சட்டையின் அழுக்கு கண்டு
அழுக்கு என்று முகம் சுளிக்காதீர்கள்
அன்பர்களே!
அழுக்கைத் தின்னும் மீனை
கடைசியில்
நாம் தின்போம்!
*****

பூ
துவைத்த ஒரு பொழுதில்
உதிர்ந்தது
பூ போட்ட என் சட்டையிலிருந்து
ஒரு பூ!
அலசி எடுத்த மறுபொழுதில்
கூடுதலாக
மலர்ந்திருந்தது
பூ போட்ட உன் புடவையில்
ஒரு பூ!
*****

No comments:

Post a Comment