17 Mar 2017

என்றீர்கள்... சென்றீர்கள்!


என்றீர்கள்... சென்றீர்கள்!
"நீங்கள் குப்பைகளைக் கொட்டுவது
குப்பைத் தொட்டியில் அல்ல
பூந்தொட்டியில்" என்றேன்
"அதற்கென்ன
உரமாக்கிக் கொள்ளும்!" என்று
அலட்சியமாய்ச் சொல்லிச் சென்றீர்கள்.
"நீங்கள் கழிவுகளைக் கலப்பது
நதியில் அல்ல
ஏரியில்!" என்றேன்.
"அதற்கென்ன
மீன்கள் உண்டு கொள்ளும்!" என்று
மெத்தனமாய்ப் பதில் உரைத்தீர்கள்.
"நீங்கள் காறித் துப்புவது
உங்கள் இடத்தில் அல்ல
பொது இடத்தில்!" என்றேன்.
"அதற்கென்ன,
நீங்களும் துப்பி விட்டுச் செல்லுங்கள்!" என்று
மீண்டும் ஒரு முறை
காறித் துப்பி விட்டுச் சென்றீர்கள்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...