ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து... நீட் விநோதக் கூத்துகள்!
உலகில்
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கிறது. கல்வித் துறைக்கு இருக்கும்
ஒரே கடமை, மாணவர்களுக்குப் பரீட்சை வைப்பது. அந்தப் பரீட்சையை எப்படியாவது லீக் செய்வது
மாபியாக்களின் கடமை.
கடந்த
7 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 70 வினாத்தாள்கள் கசிந்துள்ளனவாம். இரண்டு கோடி மாணவர்கள்
இதனால் மன அழுத்தத்தில் இருக்கிறார்களாம்.
எனக்கு
என்னவோ, வினாத்தாள் தயாரிப்பதை விட, அதை எப்படிக் கசியவிடுவது என்பதில் தான் நம் ஊர்
மாபியாக்கள் அதிக மேலாண்மைத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
மத்திய
பிரதேசத்தின் வியாபம் ஊழல் எல்லாம் ஒரு பல்கலைக்கழக அளவிலான பிஹெச்டி ஆராய்ச்சி. இப்போது
நீட் தேர்விலும் அந்த வித்தையைக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த
முறை ராஜஸ்தானில் ஆரம்பித்து, மகாராஷ்டிராவின் தாவரவியல் பெண் விரிவுரையாளர் மனீஷா,
பேராசிரியர் குல்கர்னி என சிபிஐ லிஸ்ட் நீள்கிறது. தாவரவியல் டீச்சர் என்பதால், வினாத்தாளை
எப்படிக் கிளைபரப்பச் செய்வது என்று தாவரவியல் ரீதியாக யோசித்திருப்பார் போலிருக்கிறது!
முதல்
அடுக்கில் ஒரு கொஸ்டின் பேப்பர் 5 கோடி முதல் 10 கோடி வரை விற்கப்பட்டதாம். ஆஹா, கல்வியின்
மதிப்பு எவ்வளவு உயர்ந்துவிட்டது பாருங்கள்!
கடந்த
மே 3ஆம் தேதி, சுமார் 22 லட்சம் அப்பாவிகள், மன்னிக்கவும், மாணவர்கள், நீட் தேர்வை
எழுதப் போனார்கள். தேர்வு மையங்களில் இருந்த கட்டுப்பாடுகளைப் பார்த்தால் ஏதோ சர்வதேச
எல்லை பாதுகாப்புப் படை முகாம் போல இருந்தது.
மதியம் 2 மணி பரீட்சைக்கு காலை 11 மணிக்கே ஆஜராக
வேண்டும்.
மெட்டல்
டிடெக்டர் சோதனை.
ஏதோ
ஓர் அரசு அடையாள அட்டை அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு
கைப்பேசி,
கால்குலேட்டர் தடை சரி. மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, கண்ணாடி, தாயத்து, பெல்ட்
எல்லாவற்றையும் கழற்றச் சொன்னார்கள்.
பாவம்
மாணவ மாணவிகள், நகைகளைக் கழற்றிப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, ஏதோ போருக்குப் போகும்
துறவிகள் போல உள்ளே போனார்கள்.
அதிக
உயரமுள்ள காலணிகளுக்கும் தடை. தப்பித்தவறி செருப்புக்குள் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்
வைத்து பிட் அடித்தால் என்ன செய்வது?
இவ்வளவு
இரும்புத்திரை பாதுகாப்போடு, துபாய், அபுதாபி, சிங்கப்பூர் என உலகமெங்கும் 5,500 மையங்களில்
தேர்வு நடத்தி முடித்தார்கள். ஆனால், இவ்வளவு சோதனையிலும் எதைச் சோதிக்க மறந்தார்கள்
தெரியுமா? அந்த வினாத்தாளின் ரகசியத் தன்மையை மட்டும்தான்!
தேசிய
தேர்வு முகமை இப்போது நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மிகவும் பொறுப்புணர்வோடு, நீங்கள்
கட்டிய எக்ஸாம் பீஸைத் திரும்பத் தருகிறோம், என்று அறிவித்திருக்கிறது. என்னவொரு பெருந்தன்மை!
இரண்டு
மூன்று வருடங்கள் தூக்கமில்லாமல், கோச்சிங் சென்டருக்குப் பல லட்சங்களை அழுதுவிட்டுப்
படித்த மாணவனிடம், இந்தாப்பா உன் அப்ளிகேஷன் பீஸ், வச்சுக்கோ, என்று கொடுப்பது எவ்வளவு
பெரிய நகைச்சுவை!
22 லட்சம்
மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணமாக மட்டுமே ரூ.300 கோடி வசூலாகும். ஜேஇஇ எல்லாம் சேர்த்தால்
வருஷத்துக்கு 800 கோடி ரூபாய் டர்ன்ஓவர் பார்க்கும் இந்த மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு,
சொந்தமாக ஒரு பிரிண்டிங் பிரஸ் கூட கிடையாதாம். கேள்வித்தாள் டைப் செய்வதில் இருந்து
அதை அச்சிட்டு, பார்சல் கட்டி அனுப்புவது வரை நூறு கைகள் மாறுகிறதாம். பிறகு கசியாமல்
என்ன செய்யும்?
போனால்
போகிறது, ஜூன் 21இல் மறுதேர்வு நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அடுத்த வருஷத்தில இருந்து எல்லாமே
கம்ப்யூட்டர் வழி ஆன்லைன் தேர்வுதான் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அங்கே
ஹேக் செய்ய மாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை!
மாணவர்களுக்கு
இருக்கும் மருத்துவ மோகத்தைப் பயன்படுத்தி, அவர்களைத் தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டே
இருப்பதுதான் தற்போதைய கல்வி முறையின் உன்னத நோக்கம் போலும். இந்த லட்சணத்தில், இனியும்
நீட் தேர்வு தொடரக் கூடாது என்று அறிவார்ந்த மக்கள் ஆசைப்படுகிறார்களாம்.
அறிவார்ந்த
மக்கள் ஆசைப்படலாம். ஆனால் மாபியாக்களும், கோச்சிங் சென்டர்களும் அத்தனை சீக்கிரம்
இந்தச் சுவாரசியமான விளையாட்டை நிறுத்த விடுவார்களா என்ன?
வரும்
ஜூன் 21ஆம் தேதி வினாத்தாள் கசியுமா, அல்லது விடைத்தாள் மறையுமா என்பதைப் பார்க்க நாம்
அனைவரும் ஆவலோடு காத்திருப்போம்!
*****

No comments:
Post a Comment