புத்தரின் ஞானமும் அவரது இரு சங்கங்களும்!
ஆசையே
துன்பங்களுக்குக் காரணம் என்பதை கௌதம சித்தார்த்த புத்தர் அரச லிமிடெட் நிறுவன ஊழியராய்
இருந்த கி.மு. 2520 ஆவது காலத்தில் ஒரு பட்ஜெட் நாளில் அறிந்து ஞானமடைந்தார்.
மேலும்
அவர் அரச லிமிடெட் நிறுவன ஊழியராய் இருந்து மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ எண்வகை
மார்க்கங்களை உபதேசித்தார்.
அவையாவன,
1. எந்த ஓய்வூதியத் திட்டமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளல்
2. சரண் விடுப்பு போனாலும் சரண்டர் ஆதல்
3. அகவிலைப்படி அறிவிக்கப்படாவிட்டாலும் அக மகிழ்வோடு
இருத்தல்
4. காலிப் பணியிடங்களைக் கண்டு கலங்காது இருத்தல்
5. ஊதிய முரண்பாடுகளை உற்றுநோக்காது இருத்தல்
6. தற்காலிக நியமனங்கள் தற்செயலானவை எனப் புரிந்து
கொள்ளல்
7. உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை எதிர்பாராமல் உயர்
கல்வி பெறுதல்
8. பதவி உயர்வுகளை எதிர்பாராமல் பணியாற்றுதல்
இந்த
எண்வகை மார்க்கங்களை ஏற்ற சங்கங்கள் பிற்காலத்தில் சாக்டோ என்றும் சியோ என்றும் இரண்டாகப்
பிரந்தன. சியோ தொடர்ந்து வந்த காலத்தில் கும்பானியின் நிறுவனமாகவும் சாக்டோ வாட்டர்டெல்லின்
நிறுவனமாகவும் வளர்ந்தன.
*****
No comments:
Post a Comment