தந்தையிடம் கேளுங்கள்
தந்தையிடம் கேளுங்கள்
தந்தை சொல் மிக்க மந்திரம்
இல்லை என்பதால்
நானென்ன சொல்கிறேன் என்றால்
நிறைய சம்பாதியுங்கள்
வீடு வாங்குங்கள்
வீட்டிற்குள் வைப்பதற்கு
சம்பாத்தியத்தை வைப்பதற்கும்
பீரோ வாங்குங்கள்
காவலுக்கு நாய்களை
நாய்களைப் பார்த்துக் கொள்ள
மனைவியைப் பிள்ளைகளை வாங்குங்கள்
சம்பாத்தியத்தைப் பிறத்தியார்
வந்து
கொள்ளையடித்து விடாமல்
அருகில் இருப்போரைக் குண்டர்களாக்கிக்
கொள்ள
அடிக்கடி சோறு போடுங்கள்
குவார்ட்டர் ஊற்றுங்கள்
படித்தால் சம்பாதிக்க முடியும்
என்று சொல்லாதீர்கள்
சம்பாதித்தால்தான் படிக்க
முடியும் என்று சொல்லுங்கள்
உங்களுக்குச் சந்தேகம் என்றால்
உங்கள் ப்ளாட் அருகே
பள்ளியும் கல்லூரியும் கட்டி
வைத்திருக்கும்
கல்வித் தந்தையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
*****
No comments:
Post a Comment