2 Jun 2022

இறைவா ரவுடி ஜோக்கர்களிடமிருந்து காப்பாற்று

இறைவா ரவுடி ஜோக்கர்களிடமிருந்து காப்பாற்று

ஒரே மன உளைச்சல்.

எப்படியாவது ஏற்படுத்தி விடுகிறார்கள்.

வேண்டுமென்றுதான் செய்கிறார்களோ

வேண்டாமென்றுதான் செய்கிறார்களோ

இரண்டிற்கும் சம வாய்ப்புகள் இருக்கின்றன

எப்படியோ

பிடிக்காத காரியங்களை முதன்மையாகச் செய்கிறார்கள்

பிடித்தவற்றை இரண்டாவதாக மூன்றாவதாகவோ கூட அல்ல

கட்டக் கடைசியாகவும் செய்வதில்லை

மன உளைச்சலோடு இருக்கும் போதுதான்

வெறுப்பேற்றும் மற்றும் கடுப்பேற்றும் ஜோக்குகளை

எப்படியோ கண்டுபிடித்து அடிக்கிறார்கள்

இது போன்ற கொலம்பசின் கண்டுபிடிப்புகள்

எப்படி சாத்தியமாகிறதோ

இந்த அசாத்திய சாத்தியம் குறித்துக் கேட்டால்

கடுப்பேற்ற அடித்த ஜோக்கை

மனநிலையை மாற்ற அடித்தேன் என்கிறார்கள் ரவுடி ஜோக்கர்கள்

மை லார்ட்

இவர்களை மட்டும் மன்னிக்கவே கூடாது

குறிப்பாக அவர்கள் சொல்லும் ஜோக்குகளை

எனக்கு மன உளைச்சல் வந்தால்

அவர்களுக்கு ஜோக்கடிக்கும் மனநிலை வந்து விடுகிறது

இறைவா

இந்த விசயத்தில் நீதான் தலையிட்டு

என்னையும் இந்த ரவுடி ஜோக்கர்களையும் காப்பாற்ற வேண்டும்

ஒருவர் மன உளைச்சலின் போது ஆஜராகி

பிரசென்ட் போடும் இவர்களை நீதான் ஆப்சென்ட் போட வைக்க வேண்டும்

மன உளைச்சல்கள் தவிர்க்க முடியாதது

ரவுடி ஜோக்கர்கள் தவிர்க்கக் கூடியவர்கள்தான்

இறைவா நீ நினைத்தால்…

இதற்கு முன்பு

நான் இந்த அளவுக்கு உன்னிடம் பிரார்த்தித்ததில்லை

என்பதைக்

கருத்தில் கொண்டு பரிசீலிக்கவும்

ஓர் உண்மையான பக்தன்

எப்போதாவதுதான் பிரார்த்திப்பான்

தாங்க முடியாத துன்பமும் துயரமும் நேர்கையில்

இதையும் கவனத்தில் கொண்டு கவனமாகப் பரிசீலிக்கவும்

இதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கவும்

இல்லையென்றால் அப்படியே விட்டு விடவும்

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...