2 Jun 2022

எடிசனுக்குப் பின் என் ஆராய்ச்சி

எடிசனுக்குப் பின் என் ஆராய்ச்சி

இரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போதுதான்

எழுப்பி விட்டு

லைட்டை ஆப் பண்ணி விட்டு வந்து படு என்கிறார்கள் படுபாவிகள்

நன்றாகத் தூங்குவதில்

எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் என்று

வயிற்றில் பொங்கும் அமிலத்தைப் பொருட்படுத்தாது

மனதில் தெறிக்கும் வெறுப்பை வெளிக்காட்டாது

எழுந்து சென்று ஆப் செய்ய வேண்டியிருக்கிறது

பிறகு லைட்டையும் ஆப் செய்து விட்டு

இருட்டில் நெடுநேரம் விழித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது

உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி விட்டால்

அதற்குப் பின்பு அந்த இரவு அவருக்கு

உறக்கம் வராத இரவுதான்

ஆம்

அந்த இரவில் லைட் உறங்கி விடுகிறது

எழுப்பி விட்டவர் உறங்க முடிவதில்லை

உறக்கம் வராத அந்த இரவில்

லைட்டைக் கண்டுபிடிக்க பத்தாயிரம் ஆராய்ச்சி செய்த

எடிசன் போல ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்

எதற்காக ஒவ்வொரு இரவும்

உறங்கிக் கொண்டிருக்கும் என்னை எழுப்பி

எரிகின்ற லைட்டை ஆப் செய்ய சொல்கிறார்கள்

லைட்டை ஆப் செய்வது அவ்வளவு பெரிய வேலையா

இல்லையில்லை

ஒருவரின் உறக்கத்தைக் கெடுப்பது அவ்வளவு சிறிய வேலையா

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...