அது ஒரு பேய் நதி
வறட்டுத்தனமான ஒரு பிடிவாதம் வந்து சூழ
விட்டு விட்டு வாழ முடியும் என்று தோன்றாதொழிய
விட்டால் எதையோ இழந்தது போல இருக்க
அதற்குப் பிறகு என்று சொல்வதோ
அதனையடுத்து என்று சொல்வதோ
நம்பிக்கை கொடுப்பது போல்
ஏதும் நடக்குமோ நடக்காதோ
இருண்மையில் இருக்கும் போது
வாழ்க்கை ருசிப்பது போல் தோன்றுகையில்
மொத்த வாழ்க்கையையும் பாழாக்குமது
தனக்குத் தானே ஒரு சிறையைச் செய்து கொள்வதில்
தனித்த ஓர் ஆனந்தம் உண்டாவதும்
அனுபவங்கள் ஒவ்வொன்றையும்
உறைய வைத்துப் பார்ப்பதுவும்
அதுவோ
எதற்கும் கட்டுப்படாமல்
சுழித்துக் கொண்டோடும்
ஒரு பேய் நதி
*****
No comments:
Post a Comment