அவர்களின் துப்பாக்கிகளே அவர்களைச் சுடும்
முதலில் சிதைபடும் ஆளுமை
அதன் பிறகு அழிந்தொழியும் மனநிலை
அவற்றை அவர்களைக்
கண்டு கொள்ள முயற்சிப்பதில்
ஆவதொன்றுமில்லை
நியாயத்தையும் பேச முடியாமல் போவது
பலகீனமாகவும் இருக்கலாம்
அதை எழுத முடிவது பலமாகவும் இருக்கலாம்
பலம் எதில் இருக்கிறதோ அதைச் செய்
பலவீனத்தைக் கண்டு கொண்டு ஆவதென்ன
எதிரிகள் அதைக் குறி வைத்துத்
தாக்கிக் கொண்டு இருப்பார்கள்
தாக்கிக் கொண்டிருக்கட்டும்
அதுவே நல்லது
பலவீனம் பலமாகி விடும் போது
அவர்கள் குறி வைத்த தோட்டாக்களே
அவர்களைச் சுட போதுமானதாகும்
*****
No comments:
Post a Comment