22 Apr 2022

உடைபடும் வெளிச்சங்கள்

உடைபடும் வெளிச்சங்கள்

ரகசிய வாக்குறுதி

உடல் மேல் போர்த்தப்பட்டிருக்கிறது

உள்ளிருக்கும் ஆடைகளின் நிறங்கள்

அதனுள்ளிருக்கும் உள்ளாடைகளின் நிலைகள்

அலசப்பட்டு ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன

இன்னும் சிறிது நேரத்தில்

பரிசோதனை அறிக்கைகள் வெளியாகக் கூடும்

வயிற்றுக்குள் இருந்து சத்தமிட்ட

பசியின் குரல்கள்

மெலிந்துப் போய் துடித்த

இதயத்தின் வேதனைகள்

பெரும்பாடு பட்டு சுவாசித்த

நுரையீரலின் முனகல்கள்

அறிக்கையில் இல்லாமல் போகக் கூடும்

சாட்சிகள் பிறழ்ந்துப் போய்

பொய் பிரகடனங்களை முழங்கக் கூடும்

சாட்சியங்கள் பிறழ்வதேது

சாட்சியங்கள் பொய் சொல்வதேது

அறிக்கைகளின் சாட்சியங்களைக் கொண்டு

வரலாறு மீண்டும் எழுதப்படும் போது

பொய்மைகளின் கண்கள் கூசுமளவுக்கு

மறைக்கப்பட்ட பிரதேசங்களில்

உடைத்துக் கொண்டோடும்

உண்மைகளின் வெளிச்சம்

வெள்ளக் காட்டைப் போல

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...