
ஒரு மரக்கன்றை வளர்த்தல்
ஒரு மரத்தைப் பரிசளிக்கிறேன்
என்றாள்
பிரிய தோழி
கையிலிருந்தது ஒரு மரக்கன்று
மரம் வானத்தை மறைக்கும்
இருளைக் கொண்டு தரும்
தூக்கத்தைச் சுமந்து வரும்
கனவுகளைக் கொண்டு வந்து கொட்டும்
நள்ளிரவில் மலர் சொரியும்
அதிகாலையில் பறவைகளை
அழைத்து வந்துப் பாடச் செய்யும்
என்று மரம் பற்றி பற்பல சொன்னாள்
மரமாகும் கனவுகளைச் சுமந்து
கொண்டு
ஒவ்வொரு இரவும் பகலும்
மரக்கன்றை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்
விரிவாக்கம் செய்ய வாய்ப்பில்லாத
ஒரு சாலையோரத்தைத் தேர்ந்து
கொண்டு
*****
No comments:
Post a Comment