22 Apr 2022

நெடும்பேச்சு

நெடும்பேச்சு

அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்ற

நாங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்

நடுசாலையில் விழுந்து கிடப்பவரைப் பற்றி

இரத்த அழுத்தம் அதிகமாகி விழுந்திருக்கலாம் என்று

நான் சொல்வதை மறுப்பது போல

லோ சுகரில் கூட மயங்கியிருக்கலாம் என்றார் அவர்

அதிகாலை பெட் காபி போல

ஆல்கஹால் குடிப்போர் நினைவுக்கு வர

அப்படியும் இருக்காலாமோ என்ற

என் சந்தேகத்தை வெளிப்படுத்தியதும்

கஞ்சா கேஸாகவும் இருக்கலாம் என்றார் அவர்

இரவுணவு நஞ்சாகியும் விழுந்திருக்கலாம்

நஞ்சிட்டும் விழுந்திருக்கலாம்

எவரேனும் தாக்கி உள்காயமாகியும் விழுந்திருக்கலாம் என

தோன்றும் சந்தேகங்களுக்கேற்ப

ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிச் செல்லும் வரை பேசிக் கொண்டிருந்தோம்

அதற்கு மேல் பேச வழியில்லாமல் போக

வேறு வழியில்லாமல் நடைபயிற்சியைத் தொடர ஆரம்பித்தோம்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...