உங்களைப் போல எதுவுமுண்டோ
வாட்ஸ்அப் விசாரிப்புகளுக்கு
அளவில்லை
பேஸ்புக் அறிவுரைகளுக்கும்
முன்னெச்சரிக்கைகளுக்கும்
குறைச்சல் இல்லை
டிவிட்டர் குறிப்புகளுக்குக்
கணக்கு இல்லை
டெலிகிராம் கொண்டு வந்து
கொட்டும்
பி.டி.எப்.களுக்கும் காணொளிகளுக்கும்
முறையில்லை
அம்மா போல் விசாரிக்க முடியாது
தாத்தா போல் அறிவுரை சொல்ல
முடியாது
அப்பா போல் கவனமாயிருக்க
எச்சரிக்க முடியாது
மாமா போல் படம் பார்க்க சொல்லித்
தர முடியாது
அத்தை போல் வாசிக்க புத்தகத்தை
அறிமுகம் செய்து வைக்க முடியாது
வாட்ஸ்அப் பேஸ்புக் டிவிட்டர்
டெலிகிராம் வந்த பிறகு
தூரமாகி விட வேண்டும் என்பது
தெரிந்தே
தூரமாகி விட்டவர்களிடம் எப்படிச்
சொல்வேன்
உங்களைப் போல எதுவுமில்லை
என்று
*****
No comments:
Post a Comment