தவறுதலாக அழைத்து விடுபவர்
அடிக்கடி யாரோ ஒருவர்
அலைபேசியில் தவறுதலாக அழைத்து
விடுகிறார்
தான் யார் என்பதைச் சொல்ல
மறுத்து
யார் பேசுறீங்க என்று அவசரம்
காட்டுகிறார்
இன்னார் என்பதைச் சொன்ன பிறகும்
அவராக ஊரையும் பேரையும் சொல்லி
அவரில்லையா நீங்கள் என்கிறார்
இல்லை என்றதும்
இருக்காது என்பது போல நம்ப
மறுத்து
நான் அவருன்னுல நெனைச்சிக்கிட்டேன்
எப்படி நீங்க வந்தீங்கன்னு
அங்கலாய்த்துக் கொள்கிறார்
சில நொடி மௌனங்களுக்குப்
பிறகு
தவறுதலாகக் கூப்பிட்டு விட்டதாகச்
சொல்பவர்
நீங்க யார் உங்க பேர் ஊர்
என்ன என்றதும்
அழைப்பைத் துண்டித்துக் கொள்கிறார்
*****
No comments:
Post a Comment