18 Apr 2022

துணை தேடும் படலம்

துணை தேடும் படலம்

ஒரு துணையைத் தேடிக் கொள்வது எளிதன்று

நிறம் பிடித்தாக வேண்டும்

உயரம் ஒத்து வர வேண்டும்

ரசனைகள் கைகோர்க்க வேண்டும்

அந்தஸ்திலும் சமம் வேண்டும்

மனம் விரும்பியாக வேண்டும்

எல்லாம் பிடித்து இணைந்த பின்

பிரிவோம் என்றாலும்

மனம் ஒத்துப் பிரிபவராக இருக்க வேண்டும்

ஒரு நாயைப் போல

பூனையைப் போல

குருவியைப் போல

துணை தேடிக் கொள்ளும் எளிமை

மானுடர்க்கு வாய்ப்பதில்லை

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...