18 Apr 2022

நாம் தயங்குவது எதற்காக என்றால்…

நாம் தயங்குவது எதற்காக என்றால்…

ஏதோ ஓர் உணர்வு இணைக்கிறது

பிறிதோர் உ ணர்வு பிரிக்கிறது

ஓர் உணர்வைக் காட்டி

ஊரை உலகை அழிப்பதை நியாயம் செய்ய முடிகிறது

அழிப்பவர்களின் உணர்வுகள்

அதிகாரம் செய்ய ஆரம்பிக்கும் போது

நியாயத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள்

மௌனிக்கத் தொடங்குகிறார்கள்

நியாயத்திற்கான மௌனம்

அநியாயத்திற்கான ஆதரவாக மாறத் தொடங்கும் போது

அக்கிரமங்கள் தலைவிரித்து ஆடுவதாக

நாம் கூக்குரல் இடத் தொடங்குகிறோம்

நமக்குத் தெரியும்

நியாயத்திற்கான ஓர் உணர்வு

நம்மை ஒன்றிணைத்தால்

அநியாயத்திற்கான உணர்வுகளை வீழ்த்த முடியும் என்று

நாம் தயங்கிக் கொண்டிருப்பது எதற்கென்றால்

அநியாயத்திற்கு எதிரான வெட்டிப்பேச்சுகளை

அப்போதுதான் வளர்த்துக் கொண்டிருக்க முடியும் என்பதற்காக

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...