7 Apr 2022

தலைவர் வம்சம்

தலைவர் வம்சம்

ஒரு சாதாரண மனிதராக என்று சொல்ல முடியாத

குழந்தையாகத்தான் பிறந்தார்

தலைவர் என்ற பெயரெடுப்பதற்குள்

கடப்படாதவன் என்ற பெயரை பலமுறை எடுத்தார்

குடியால் கேளிக்கையால் வசீகரப் பேச்சால்

மனிதர்களை இணைக்கும் நுட்பம் கண்டவர்

தமக்காக அலைபவர்களைத் தொண்டர்கள் என்றார்

மாபெரும் கனவொன்றைப் பிரசவிக்க வேண்டுமென்று

அனுதினமும் சொல்லிச் சொல்லி

கச்சாப் பொருட்கள் இல்லாமல்

கனவின் போஷாக்குக் குன்றி விடக் கூடாதென்று

சாமர்த்தியமாய்ச் செய்த சம்பாத்தியத்தில்

உள்நாட்டு வங்கிகள் நிறைந்து

வெளிநாட்டு வங்கிகளில் திளைக்குமளவு

கருப்பும் வெள்ளையுமாய் பழுப்பும் கொழுப்புமாய்

ஏராளம் ஏராளம் சொத்திலும் சுகத்திலும் சேர்த்தார்

தலைவர்களை உருவாக்கும் தலைவர் வம்சம்

அவர்தம் வீட்டைக் கிஞ்சித்தும் குறைகளுமின்றி

நாட்டைப் பல்வேறு குறைகளோடு ஆள்வதாக

வயிற்றுக்குச் சோறில்லாதவரும் தலைவரைக் கண்டால்

வாழ்க கோஷமிடுவார் அடி வயிற்றிலிருந்து

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...