மெய்யன்பர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்
அகத்தின் அழகிற்கு முகமும்
முகத்தின் அழகிற்கு மேக்கப்பும்
இன்றி
என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்
தமிழ்நாட்டிலிருந்தாலும்
ஆங்கிலப் பள்ளியில் இருப்பதால்
ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்
என்பவரை
பளார் என்று அறைந்தால் மம்மி
என்பது மறந்து
அம்மா என்றல்லோ கத்துகிறார்
சூரியன் மின்வெட்டைப் போக்கும்
மாபெரும் பகல் நேர பல்பு
என்றால்
தயவு செய்து சிரிக்காதீர்கள்
எதார்த்தங்களை எப்படி வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்ளலாம்
மாற்றிக் கொள்வதற்கேற்ப
எதார்த்தங்களை எப்படி வேண்டுமானாலும்
பேசிக் கொள்ளலாம்
பேச்சுப் பொய்யர்கள் என்றால்
கோபித்துக் கொள்ளக் கூடாது
பெச்சின் மெய்யன்பர்கள்
*****
No comments:
Post a Comment