23 Apr 2022

விளம்பர வாழ்க்கை

விளம்பர வாழ்க்கை

கறை நல்லதென்றால்

உதவாக்கரையும் நல்லதுதான்

அந்த ஆயில் தடவினால் முடி கொட்டாது என்றால்

ஆயில் தடவாத சடை நாய் பற்றி என்ன சொல்வீர்கள்

பஜ்ஜி சாப்பிடுவோர் சருமத்திற்காக

ஒரு சோப்பு உள்ளதென்றால்

போண்டா சாப்பிடுவர்களுக்கான

சோப்பொன்றும் உள்ளதென்று அறிக

ஆர்வமுடன் விளம்பரங்களை ரசிப்பவர்கள்

புகைப் பிடித்தால் புற்றுநோயை உருவாக்கும் என்றால்

சும்மா நிறுத்துடா என்கிறார்கள்

குடி குடியைக் கெடுக்கும் என்றால்

எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்கிறார்கள்

கட்டணக் கழிவறையில் சிறுநீர் கழிக்க

ஐந்து ரூபாய் வேண்டும்

அருகிலிருக்கும் தேநீர்க் கடையில்

பானம் அருந்த ஏழு ரூபாய் வேண்டும்

இடைபடும் இரண்டு ரூபாயில்

முகம் பல மாறி விரும்பி சுவைக்கும்

பாக்கொன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்ளலாம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...