தூரப் பொருள்
காணாமல் போகும் பொருள்
எல்லாரையும் சந்தேகிக்க வைக்கிறது
பொருள் மனிதரைப்
பொருட்டில்லை என்று செய்யுமா
என்றால்
காணாமல் போகும் பொருள் செய்யும்
எடுத்தவரை எடுக்காதது போல
எடுக்காதவரை எடுத்தது போல
சம்பந்தம் இல்லாதவர்களை
சம்பந்தம் உள்ளவர்கள் போல
சம்பந்தம் உள்ளவர்களைச்
சம்பந்தம் இல்லாதவர்கள் போல
பொருள் மனிதரை
எப்படி வேண்டுமானாலும் காட்டும்
எப்படி எப்படியோ காட்டி விட்டு
ஒரு நாள் எப்படியோ
கண்ணில் படும் பொருள்
விஷமமாய் சிரிப்பொன்றைச்
சிரித்துக் கொள்ளும்
கண்கள் என்ன செய்யும்
காணாமல் போகும் பொருள்
கண்ணில் படுபவர்களை
விதவிதமாகப் பார்க்க வைக்கும்
*****
No comments:
Post a Comment