ஒரு நாள் ராஜா
விழாவின் வண்ண விளக்கொளிகளில்
ஒலிக்கும் பாடல்களின்
ஒய்யார ஓசைகளில்
தொங்கும் தோரணங்களில்
கவர்ச்சிமிகு வளைவுகளில்
அலங்காரத்துக்கும் ஏழ்மைக்கும்
சம்பந்தமில்லாதது போல இருக்கிறது
அலங்காரங்களைக் களைத்த பின்
நாளை மீண்டும்
ஏழையின் வீடாகி விடும்
இன்றொரு நாள் முழுவதும்
ராஜாவாக இருந்துப் போகட்டும்
வாங்கிய கடனுக்கும் சேர்த்து
பரம ஏழையாகி விடும்
பல நாள் ஏழை
*****
No comments:
Post a Comment