சாகாவரம் பெறும் குறிப்புகள்
எப்போதோ எழுதிய குறிப்புகள்
இப்போது உதவுகின்றன
எழுதிய காலத்தில்
முக்கியம் இல்லாதது போலத்
தோன்றிய குறிப்பு
காலத்தின் சாட்சியமாகி கவனம்
பெறுகிறது
குறிப்புகளை எழுதிக் கொண்டே
இருக்க வேண்டும்
குறிப்புகளின் பயனை
யாரும் தீர்மானிக்க முடியாது
பயன்படாது போகும் குறிப்புகள்
என்று ஏதுமில்லை
பயன்படுத்த தெரியாமல் போவதற்கு
குறிப்புகள் என்ன செய்யும்
உவமை உருவகம் அலங்காரம்
எதுவும் தேவையில்லை குறிப்புகளுக்கு
உண்மை ஒன்று போதும்
சாகாவரம் பெற்ற குறிப்புகளை
எல்லாராலும் எழுத முடியும்
*****
No comments:
Post a Comment