அங்கே குழந்தைகள் விளையாடுகின்றன
இரண்டு குழந்தைகள் சந்திக்கும்
போது
தொட்டுக் கொள்கின்றன
தழுவிக் கொள்கின்றன
பேசிக் கொள்கின்றன
விளையாட ஆரம்பித்து
சண்டையிட்டு அழ ஆரம்பித்து
விடுகின்றன
ஒருவர் கை மாறி இன்னொரு கண்களைத்
துடைத்து விட்டுக் கொள்கின்றன
பிறகு மீண்டும் தொட்டுத்
தழுவி
பேசி விளையாட ஆரம்பித்து
விடுகின்றன
இரு குழந்தைகளைக் கண்காணித்துக்
கொள்ள
ஒரு பெரிய மனுஷன் இல்லாத
வரை
அங்கே குழந்தைகள் விளையாடுகின்றன
தயவுசெய்து பெரியவர்கள் செல்ல
அனுமதியில்லை
என்று எழுதி வைத்து விடலாம்
போல
பெரியவர்களின் இடையீட்டில்
புறப்படும்
பெரும் சண்டைகளைப் பார்க்கையில்
*****
No comments:
Post a Comment