காலப்பெருநதி
எப்படி வந்திறங்குகிறதோ
எப்படியோ வழிந்தோடிக் கொண்டிருக்கிறது
ஓடிக் கொண்டிருக்கும் பிரவாகத்தில்
நானொரு நொடி
நீயொரு நொடி
காலப் பெருவெளியில் நீராடலாம்
நாமிருவர் நீராடியது
ஒரு பொழுதெனினும்
சோதிடக் கணக்குகள் ஒத்து
வராது
இருவர் நீராடியதும் வேறு
வேறு
உன்னாலான நீயும்
என்னாலான நீயும்
ஒவ்வொரு அணுவிலும் வேறுபட்டவர்கள்
உன்னையும் என்னையும் ஒன்றிணைப்பது
வேற்றுமையை விரும்பும்
ஒற்றுமையான அன்பே
அஃது வழிந்தோடும் போது
காலப்பெருவெளி புனித நதியாகி
பாவங்களை அடித்துக் கொண்டோடுகிறது
புண்ணியங்களை கரையெங்கும்
ஊற்றெடுக்க விட்டபடி
*****
No comments:
Post a Comment