வேருக்குள் உறையும் கிளையோடிகள்
வடிவத்துக்குப் பென்சிலும்
எழுத்துக்குப் பேனாவும் என்கிறார்
சில பத்தாண்டுகளைக் கடக்க
முடியாத
மத்திம பருவத்தைக் கடந்து
கொண்டிருக்கும் மனிதர் ஒருவர்
இரண்டும் இருந்தாலும்
வரைவதும் எழுதுவதும் கணினியில்
அன்றோ என்றால்
வரையும் மென்பொருளில் இருக்கும்
பென்சிலையும் பேனாவையும்
காட்டி
குதூகலத்தை நோக்கிச் செல்கிறார்
வேரை மறந்து விட்டு
கிளை நீள முடியுமா என்றால்
மண்ணில் மறைந்திருக்கும்
வேரை வெட்டுவார் யார்
வெளியே நீண்டிருக்கும் கிளையை
வெட்டாது விடுவார் யார்
என்கிறார் அந்த மத்திமர்
அதுவும் சரியன்றோ
கிளைகளை வெட்டி வீழ்த்துவது
போல
மண்ணில் புதையுண்ட வேரை வீழ்த்த
முடியுமோ
பென்சிலுக்குள் சுருளும்
ஓவியமும்
பேனாவிற்குள் உறையும் எழுத்தும்
ஒரு நொடி கண் சிமிட்டிக்
கொள்கின்றன
வசதிகளை மாற்றினாலும்
வடிவங்களை மாற்ற முடியாத
மனிதர்களின் அசாத்தியங்களை
நினைத்தபடி
*****
No comments:
Post a Comment