காணாமல் போனவை குறித்த அறிக்கை
வைப்பதற்கு இடமில்லை என்று
நெஞ்சுக்குள் இதயத்தின் அடியாழத்தில்
வைத்தார்
அறுவைச் சிகிச்சையாளர்கள்
களவாடிய பிறகு
எஞ்சியிருந்தவற்றை
இரு சிறுநீரகங்களிலும் பிரித்து
வைத்தார்
ஒரு உடற்கூறு சோதனையின் போது
இரு சிறுநீரகங்களையும் பறிகொடுத்த
பின்
கல்லீரல் மண்ணீரல் சிறுகுடல்
பெருகுடல் என
மாற்றி மாற்றி வைத்துப் பார்த்தார்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றும் காணாமல் போன
பிறகு
பிணவறையின் உடற்கூராய்வு
மேசையில்
அவரே சென்று படுத்துக் கொண்டார்
ஆய்வுக்குப் பின் வெளிவந்த
அறிக்கையில்
காணாமல் போன மனிதரின்
உயிரைப் பிரிந்து வந்த உடல்
என்ற வாசகம்
கண் சிமிட்டிக் கொண்டிருந்தது
*****
No comments:
Post a Comment