துயர் சுமந்து வரும் கனவுகள்
ஆழமாய் உறங்கும் இரவை
அகோரக் கனவொன்று வந்து
கலைத்து விட்டுப் போகிறது
கனவுக்கு நான் செய்த துன்பம்
என்னவோ
மற்றும் நானதற்கு
இழைத்த கொடுமை என்னவோ
கனவென்னைத் தண்டிக்கும் போதெல்லாம்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
தண்டிப்பவர் வாய் திறக்கக்
கூடாதென்று
மறுநாள் மற்றுமொரு மாபெரும்
அச்சுறுத்தலைச் சுமந்தபடி
வந்து நிற்கிறது கனவு
ஒரு நாளேனும் ஒரு நல்ல கனவு
கண்டால்
உங்களுக்குச் சொல்லலாம் என்று
பிரியப்படுகிறேன்
உறங்கி விடிவதற்குள்
மறைந்து போகின்றன
நன்மையைச் சுமந்து வரும்
கனவுகள்
*****
No comments:
Post a Comment