1 Apr 2022

கணக்குப் புத்தகத்தின் விவரங்கள்

கணக்குப் புத்தகத்தின் விவரங்கள்

குற்றங்களை நீட்டி முழங்க தயாராக இருக்கிறார்கள்

நன்மையை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்

சாணைக்கல் சிராய்க்காமல்

கத்தி பிரகாசம் அடைய முடியாது

விமர்சனங்கள் வெற்றியைத் தாமதப்படுத்தலாம்

நிறுத்தி விடாது

பிறப்பென்பது பிரச்சனைகளைச் சந்திப்பதற்காக

எண்ணிக்கையில் குறைவான பிரச்சனைகள்

இறப்பைப் பெருமை செய்யாது

வரலாற்றின் நினைவுகளில்

தோல்வியைச் சந்தித்து மீண்டவர்கள்

நிறைந்திருக்கிறார்கள்

நெப்போலியனின் வெற்றிகளைப் போல

லிங்கனின் தோல்விகளையும்

சரித்திரம் கணக்கில் வைத்திருக்கிறது

வெற்றியோ தோல்வியோ

எதிர்கொள்வதன் சாரம் காலக்கோட்டில் இணைகிறது

குறை சொல்பவர்கள் சொல்லட்டும்

எதிர்கொள்பவர்கள் மட்டுமே எப்போதும்

கணக்கில் கொள்ளப்படுகிறார்கள்

அவரவர் கணக்கைத் தொடங்க வேண்டிய நேரம்

காத்துக் கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...